Friday, November 6, 2020

 

குர்வஷ்டகம்

(குருவைப்பற்றிய எட்டுப் பதிகங்கள்)

       சரீரம் ஸுரூப1ம் ஸதா3 ரோக3முக்த1ம்

              யசஸ்சா1ரு சி1த்ரம் த4னம் மேருது1ல்யம் |

       மனஸ்சே1ந்ந லக்3னம் கு2ரோரங்க்4ரி ப1த்3மே

              11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் ||                     1

 மிக அழகிய உடலும், ஒருபொழுதும் நோயின்மையும், பலவகையிலும் இனிய புகழும், மேருமலைக்கு இணையான செல்வமும் இருந்தாலும், குருவின் திருவடித்தாமரைகளில் மனம் குவியவில்லையென்றால் என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

       1லத்1ரம் த4னம் பு1த்1ர பெள1த்1ராதி3 ஸர்வம்

              க்3ருஹம் பா3ந்த4வா: ஸர்வம் ஏத1த்தி4 ஜா11ம் |

       மனஸ்சே1ந்ந லக்3னம் கு2ரோரங்க்4ரி ப1த்3மே

              11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் ||                     2

 மனைவியும், செல்வமும், பிள்ளையும், பேரன் முதலிய எல்லாமும், வீடும், சுற்றமுமென்ற இத்தனையும் கூடியிருந்தும் குருவின் திருவடித்தாமரைகளில் மனம் குவியவில்லையென்றால் என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

       ஷட3ங்கா3தி வேதோ3முகே2 சாஸ்1த்ர வித்3யா*

              1வித்1வாதி33த்3யம் ஸுபத்1யம் க1ரோதி1 |

       மனஸ்சே1ந்ந லக்3னம் கு2ரோரங்க்4ரி ப1த்3மே

              11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் ||                     3

 ஆறு அங்கங்களோடு கூடிய வேதம், சாஸ்திரம், வித்யை* முதலியவை வாக்கிலிருந்தாலும், பாட்டும், உரைநடையும் படைக்கும் கவித்திறன் இருந்தாலும், குருவின் திருவடித்தாமரைகளில் மனம் குவியவில்லையென்றால் என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

       [* ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வம் என்று வேதங்கள் நான்கு. சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்பவை அவற்றின் அங்கங்கள். மீமாம்ஸா, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம் என்பவை உபாங்கங்கள். இவை பதினான்கும் ‘வித்யா ஸ்தானம்’ எனறு சொல்லப்படும்.]

        விதே3சேஷு மான்ய: ஸ்வதே3சேஷு த4ன்ய:

              ஸதா3சா1ரவ்ரு1த்தே1ஷு மத்1தோ1 ந சா1ன்ய: |

       மனஸ்சே1ந்ந லக்3னம் கு2ரோரங்க்4ரி ப1த்3மே

              11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் ||                     4

 தன் நாட்டில் புகழப்பெற்றாலும், பிற நாடுகளில் மதிக்கப்பெற்றாலும், நற்பணி நன்னடத்தைகளில் பற்றுக்கொண்டு பிறவற்றை ஒதுக்கினாலும், குருவினது திருவடித்தாமரைகளில் மனம் குவியவில்லையென்றால் என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

       க்ஷமாமண்ட3லே பூ41பூ4பா1ல வ்ருந்தை3:

              ஸதா3ஸேவித1ம் யஸ்ய பா1தா3ரவிந்த3ம் |

       மனஸ்சே1ந்ந லக்3னம் கு2ரோரங்க்4ரி ப1த்3மே

              11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் ||                     5

    ஒருவனுடிய பாதத்தாமரைகள் பூமண்டலத்தில் உள்ள மன்னர்களாலும், பேரசர்களாலும் எப்பொழுதும் வணங்கப்பட்டாலும், குருவினுடைய திருவடித் தாமரைகளில் (அவனது) மனம் குவியவில்லையென்றால் என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

       யசஸ்சே1த் க31ம் தி3க்ஷு தா3னப்ரதா1பாத்

              33த்3வஸ்து1 ஸர்வம் க1ரே யத்1 ப்ரஸாதா3த் |

       மனஸ்சே1ந்ந லக்3னம் கு2ரோரங்க்4ரி ப1த்3மே

              11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் ||                     6

 கொடையின் சிறப்பால் திக்கெட்டும் புகழ் பரவியிருந்தாலும், எவருடைய அருளினால் உலகத்துப் பொருள் அனைத்தும் கைவருமோ, அந்தக் குருவினுடைய திருவடித்தாமரையில் மனம் குவியவில்லையென்றால் என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

       ந போ4கே3 ந யோகே3 ந வா வாஜி3மேதே4

              ந கா1ந்தா1ஸுகே2நைவ வித்1தே1 ஷுசித்11ம் |

       மனஸ்சே1ந்ந லக்3னம் கு2ரோரங்க்4ரி ப1த்3மே

              11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் ||                     7

 போகத்தில், யோகத்தில், அச்வமேத யாகத்தில், காதலியின் இன்பத்தில், செல்வத்தில் கருத்தைச் செலுத்தாவிட்டாலும், குருவின் திருவடித்தாமரைகளில் மனம் குவியவில்லையென்றால் என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

        அரண்யே ந வா ஸ்வஸ்ய கே3ஹே ந கா1ர்யே

              ந தே3ஹே மனோ வர்த்11தே1 மே த்1வனர்க்4யே |

       மனஸ்சே1ந்ந லக்3னம் கு2ரோரங்க்4ரி ப1த்3மே

              11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் த11: கி1ம் ||                     8

    காட்டிலோ, சொந்த வீட்டிலோ, செய்ய வேண்டிய கடமையிலோ, உடலிலோ, உயர்ந்த வேறு எதிலுமோ என் மனம் ஈடுபடவில்லை. எனினும், குருவின் திருவடித்தாமரைகளில் மனம் குவியவில்லையென்றால் என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

        கு3ரோ ரஷ்ட11ம் ய: ப4டே2த் புண்யதே3ஹீ

              யதி1ர் பூ41தி1ர் ப்3ரஹ்மசா1ரீ ச1 கே3ஹீ |

       ல்பே4த் வாஞ்சி2தா1ர்த்த2ம் ப13ம் ப்3ரஹ்மஸம்ஜ்ஞம்

              கு3ரோருக்12வாக்1யே மனோ யஸ்ய லக்3னம் ||                  9

   பிரம்மசாரியோ, இல்லறத்தானோ, துறவியோ, அரசனோ, புண்ணியசாலியான எவன் ஒருவன் குர்வஷ்டகத்தைப் படிக்கிறானோ, குருவினால் கூறப்பட்ட வாக்கில் எவனுடைய மனம் குவிகிறதோ, அவன் விரும்பப்படும் பெரும்பேறாகிய பிரம்மம் என்று பெயர் பெற்ற பதவியை அடைகிறான்.

 


No comments:

Post a Comment