மாயா
பஞ்சகம்
(மாயை
குறித்து ஐந்து ச்லோகங்கள்)
நிருபம
நித்ய நிரம்சகே(அ)ப்யக2ண்டே3
மயி சிதி ஸர்வ விகல்பநாதி3சூந்யே |
க4டயதி ஜகதீ3ச ஜீவ பே4த3ம்
த்வக4டித - கடநா - படீயஸீ மாயா || 1
சேர முடியாததைச் சேர்த்துவைப்பதில் மிகத் திறமையுள்ள மாயையானது
ஒப்பற்றதும், அழிவற்றதும், கூறுபோட முடியாததும், பிரிவு அற்றதும், வேற்றுமை முதலிய எதுவும் இல்லாததும், ஞான ஸ்வரூபமான என்னிடமும் உலகம் - ஜீவன் -
ஈசுவரன் என்ற வேற்றுமையைச் சேர்த்துவைக்கிறது.
ச்ருதிசத
நிக3மாந்த சோத4காந
பயஹஹ த4நாதி3: நிதர்சநேந ஸத்3ய: |
கலுஷயதி
சதுஷ்பதா3 த்3யபி4ந்நான்
அக4டித – க4டநா - படீயஸீ மாயா || 2
சேரமுடியாததைச் சேர்த்துவைப்பதில் மிகத் திறமையுள்ள மாயையானது
நூற்றுக்கணக்கான ச்ருதிகளையும், உபநிஷத்துக்களையும்
பரிசோதித்துப் பார்ப்பவர் களையும், பணம்
முதலானவைகளைக் காட்டுவதனால் உடனேயே நாலுகால் பிராணிகளைக் காட்டிலும் விசேஷம்
இல்லாதவர்களாக மாசுபடுத்துகிறது. ஆச்சர்யம்!
ஸுக2 சித3க3ண்ட3
விபோ3த4 மத்3விதீயம்
வியத3நிலாதி3 விநிர்மிதே நியோஜ்ய |
ப்4ரமயதி
ப4வஸாக3ரே
நிதாந்தம்
தவக4டித க4டநா - படீயஸீ மாயா || 3
அகண்ட ஆனந்த சைதன்யம் போன்ற ஸ்வரூபமானதும், இரண்டாவது வலது இல்லாததுமானதை (ஆத்மாவை)
ஆகாசம், வாயு முதலியவைகளால் உண்டுபண்ணப்பட்ட
(பாஞ்சபௌதிகமான சரீரத்)தில் செலுத்தி இயக சோத துவைப்பதில் திறமையுள்ள மாயை, ஸம்ஸார ஸாகரத்தில் மிகவும் சுழற்றுகிறது.
அபக3த
கு3ண வர்ண ஜாதி பே4தே3
ஸுக2சிதி விப்ர விடா3த்3யஹங்க்ருதிம் ச |
ஸ்பு2டயதி
ஸுத தா3ர கே3ஹ
மோஹம்
த்வக4டித க4டநா படீயஸீ மாயா || 4
குணம், வர்ணம், ஜாதி இவைகளின் வேற்றுமைகள் அற்றதும், ஆனந்த சைதன்ய ரூபமுமான தில் (ஆத்மாவில்)
பிராமணன், வைச்யன் முதலான அஹங் காரத்தையும், பிள்ளை, மனைவி, வீடு
இவைகளில் எனது என்ற மயக்கத்தையும், சேராததைச்
சேர்ப்பதில் திறமையுள்ள மாயை அழுத்தமாகத் தோற்றுவிக்கிறது.
விதி4 ஹரி ஹர பே4த3மப்யக3ண்டே3
ப3த விரசய்ய பு3தா4நபி ப்ரகாமம் |
ப்4ரமயதி
ஹரி ஹர விபே4த பா4வான்
அக4டிதக4டநா படீயஸீ மாயா || 5
சேரமுடியாததைச் சேர்த்துவைப்பதில் திறமையுள்ள மாயையானது, பிரிக்கமுடியாத (ப்ரஹ்மத்) திலும் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற வேற்றுமையை ஏற்படுத்திப்
படித்தவர்களையும், விஷ்ணுவிடமும், சிவனிடமும் வேற்றுமை உணர்ச்சி உள்ளவர்களாக
மிகவும் மயக்குவிக்கிறது.
No comments:
Post a Comment