Saturday, November 7, 2020

 குருபாதுகா பஞ்சகம்

       (ஶ்ரீ ஜகத்குரு ஆதிசங்கராசார்யர் அவர்கள் நர்மதா நதிக்கரையில் தம்முடைய குருவான ஶ்ரீ கோவிந்த பகவத்பாதரைத் தரிசித்த பொழுது அந்த ஆச்ரமத்தின் வாயிலில் குருவின் திவ்ய பாதுகைகளைக் கண்டவுடன் இந்த ச்லோகங்கள் ஶ்ரீ பகவத்பாதரின் வாக்கிலிருந்து உதித்தன.)

 ஜக3ஜ்ஜநிஸ்தே2ம – லயாலயாப்4யாம்

       அக3ண்ய – புண்யோத3ய – பா4விதாப்4யாம் |

த்ரயீசிரோஜாத – நிவே3திதாப்4யாம்

       நமோ நம: ஸ்ரீகு3ருபாது3காப்4யாம் ||                                      1

       ஸகல உலகங்களின் உற்பத்தி, ஸ்திதி, லயம் இவற்றுக்குக் காரணங்க ளாயும், எல்லையில்லாமல் இருக்கிற புண்ணிய பரிபாகத்தின் மகிமையினால் அடையக்கூடியனவாயும், வேதங்களின் சிரோபூதமான உபநிஷத்துக்களால் மட்டும் அறியக்கூடியனவுமான சத்சார்யருடைய பாதுகைகளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

விபத்தமஸ்தோம – விகர்த்தநாப்4யாம்

       விசிஷ்ட - ஸம்பத்தி – விவர்த4நாப்4யாம் |

நமஜ்ஜநாசேஷ – விசேஷதா3ப்4யாம்

       நமோ நம: ஸ்ரீகு3ருபாது3காப்4யாம் ||                                      2

       ஆபத்துக்களாகிற இருள் கூட்டங்களைப் போக்குவதில் சூரியனாகவும், உயர்ந்த ஐச்வர்யங்களை மேன்மேலும் விருத்திபண்ணிக் கொடுக்கக்கூடியனவாயும் வணங்குகிற ஜனங்களுக்கு, எல்லை இல்லாத ஸகல புருஷார்த்தங்களையும் கொடுக்கக்கூடியவையுமான ஸ்ரீ ஆச்சார்யாருடைய பாதுகைகளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

ஸமஸ்த3 - துஸ்தர்க்க - கலங்க - பங்கா -

       பநோத3ந – ப்ரௌட4 ஜலாசயாப்4யாம் |

நிராச்ரயாப்4யாம் நி2கி2லாச்ரயாப்4யாம்

       நமோ நம: ஸ்ரீகு3ருபாது3காப்4யாம் ||                                      3

       பலவாறான போலித் தர்க்கத்தினால் கற்பிக்கப்பட்ட தோஷங்களாகிற சேற்றைப் போக்கடிப்பதில் பெரிய ஜலப்பெருக்காயும், மற்றொன்றைத் தாம் ஆச்ரயிக்காமலும், மற்றவர்களாலே ஆச்ரயிக்கப்பெறுவனவாகவும் இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யாருடைய பாதுகைகளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

 தாபத்ரயாதி3த்ய – கரார்தி3தாநாம்

       சா2யாமயீப்4யாம் அதிசீதலாப்4யாம் |

ஆபந்ந – ஸம்ரக்ஷண3 – தீக்ஷிதாப்4யாம்

       நமோ நம: ஸ்ரீகு3ருபாது3காப்4யாம் ||                                      4

                 ஆத்யாத்மிகம்: ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்று சொல்லக்கூடிய தாபத்ரயங்களாகிற கொடிய சூரிய கிரணங்களால் தகிக்கப்படுகிற ஸர்வ ஜீவராசி களுக்கும், மிகவும் குளிர்ந்த நிழலைக் கொடுப்பவையாயும், சரணமடைந்தவர்களை ஸம்ரக்ஷிப்பதையே முக்கிய நோக்கத்துடன் கூடியவையுமான ஸ்ரீ ஆச்சார்யா ருடைய பாதுகைகளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

யதோ கி3ரோ(அ)ப்ராப்ய தி4யா ஸமஸ்தா

       ஹ்ரியா நிவ்ருத்தா: ஸமமேவ நித்யா: |

தாப்4யாமஜே3சாச்யுத – பா4விதாப்4யாம்

       நமோ நம: ஸ்ரீகு3ருபாது3காப்4யாம் ||                                      5

                 ஸகல வேதராசிகளும், தம்முடைய புத்தி, யுக்திகளோடு கூடி, எவற்றின் மகிமையை வர்ணிக்க ஆரம்பித்தும் இயலாமல், லஜ்ஜையோடு திரும்பு கின்றனவோ, பிரம்மா, விஷ்ணு, ருத்திரர்களால் எப்பொழுதும் கொண்டாடப பெற்றவையுமான ஸ்ரீ ஆச்சார்ய பாதுகைகளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

யே பாது3கா – பஞ்சகமாத3ரேண

       பட2ந்தி நித்யம் ப்ரயதா: ப்ரபா4தே |

தேஷாம் க்3ருஹே நித்யநிவாஸசீலா

       ஸ்ரீதே3சிகேந்த்3ரஸ்ய கடாக்ஷலக்ஷ்மீ: ||                                  6

       எந்தப் பக்தர்கள் இந்தப் பாதுகா பஞ்சகத்தைத் ஆதராதிசயத்துடனும் பரிசுத்தர்களாயும் பிரதிதினம் காலையில் பாராயணம் செய்கிறார்களோ, அவர்க ளுடைய வீட்டில் ஸ்ரீ பமாசார்யர்களுடைய கருணாவிலாசம் என்ற லக்ஷமீ நித்ய வாஸம் செய்கிறாள்.


No comments:

Post a Comment