Friday, November 6, 2020

 

ஸுவர்ணமாலா ஸ்துதி

       (‘அ’ விலிருந்து ‘க்ஷ’ வரை உள்ள அக்ஷரங்களை வரிசைக்கிரமமாக ச்லோகங்களின் முதலெழுத்தாக வைத்து செய்த துதியாதலால் “ஸுவர்ணமாலா” எனப்பட்டது.)

 அத2 கத2மபி மத்3ரஸநாம் த்வத்3கு4

       லேசைர் விசோத4யாமி விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             1

             எங்கும் நிறைந்த பரமேச்வரா! மிகவும் சிரமப்பட்டு உன் குணங்களில் கொஞ்சம் சொல்லுவதால் என் நாக்கை தூய்மைப்படுத்திக் கொள்கிறேன். அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவேசங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ஆக2ண்ட3ல மத33ண்ட3ந பண்டி3

       தண்டு3 ப்ரிய சண்டீ3ச விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ3 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             2

       இந்திரனின் கர்வத்தை அடக்குவதில் ஸமர்த்தரும், (தாண்டவத்தை உண்டாக்கிய) தண்டுவுக்குப் பிரியமானவரும், சண்டி தேவிக்குக் கணவருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே,! சங்கரனே ! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

இப4சர்மாம்ப3ர சம்ப3ர ரிபுவபு:

       அபஹரணோஜ்ஜ்வல் நயந விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             3

               யானைத்தோலை ஆடையாய்க் கொண்டவரும், மன்மதன் உடலை எரித்த அக்னிக் கண்ணையுடைய வருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே சம்புவே, சங்கரனே உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ஈச கி3ரீச நரேச பரேச

       மஹேச பி3லேசய பூஷண போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             4

                ஈச்வரன், மலைக்கு ஈச்வரன், மனிதர்க்கு ஈச்வரன், எல்லாவற்றிற்கும் மேம்பட்ட பரேச, மஹேச! (புற்றில் வசிக்கும்) பாம்பை அணிகலனாய்க் கொண்ட ஏ பரமேச்வரா, அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே சம்புவே, சங்கரனே உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

உமயா தி3வ்ய ஸுமங்க3ள விக்3ரஹ -

       யாலிங்கி3த வாமாங்க3 விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             5

                 ஒளிபொருந்திய மங்களமான உடலோடு கூடிய உமாதேவியால் இடப் பாகத்தில் தழுவப்பெற்ற ஏ பரமேச்வரா ! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ஊரீ குரு மாமஜ்ஞ மநாத2ம்

       தூ3ரீ குரு மே து3ரிதம் போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             6

       ஒன்றும் தெரியாதவனும், கதியற்றவனுமான என்னை ஏற்றுக்கொண்டு என் பாபங்களைத் துரத்துவாய் ஏ! பசமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ரிஷிவர மாநஸ ஹம்ஸ சராசர

       ஜநநஸ்தி2திலய காரண போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             7

         உயர்ந்த ரிஷிகளின் மனதிற்கு ஹம்ஸமாய் விளங்குகிறவரும், அசைவதும் அசையாததுமான வஸ்துக்களுக்கு பிறப்பு, வளர்ப்பு, அழிவு இவற்றின் காரணருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ரூக்ஷாதீ4ச கிரீட மஹோக்ஷா -

       ரூட4 வித்4ருத ருத்3ராக்ஷ விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             8

               நக்ஷத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனைக் கிரீடமாகக் கொண்டவரும், பெரிய காளைமாட்டை வாகனமாய்க் கொண்டவரும் ருத்ராக்ஷம் பூண்டவரும் எங்கும் நிறைந்தவருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ல்ருவர்ணத்3 வந்த்3வ மவ்ருந்த ஸுகுஸுமமி

       - வாங்க்4ரௌ தவார்ப்பயாமி விபோ4

ஸாம்ப4 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             9

               என் இரண்டு கண்களாகிற காம்பற்ற மலர்களை உன் திருவடிகளில் அர்ப்பணம் செய்கிறேன். ஏ பரமேச்வரா! நீயே எனக்குச் சரணம். அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ஏகம் ஸதி3தி ச்ருத்யா த்வமேவ

       ஸத2ஸீத்யுபாஸ்மஹே ம்ருட3 போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             10

       ஒன்றே ஸத்யம் எனும் வேதவாக்யத்தால் நீயே அந்த சத்யமாக இருக்கிறாய் என்று உபாஸிக்கிறேன். ம்ருட (இரண்டும் அளிக்கும்) பரமேச்வர, அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: -    இந்த கவி வாக்யம் விப்ரர்கள், ஒரே பரம் பொருளையே பலவாய்ச்           சொல்லுகிறார்கள். இதனால் அத்வைத சாஸ்திர பரம்பொருள் சிவனே         என ஆசார்யாள் நிரூபிக்கிறார்கள்.

ஐக்யம் நிஜப4க்தேப்4யோ விதரஸி

       விச்வம் ப4ரோsத்ர ஸாக்ஷீபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             11

                உன்னைத்தொழும் பக்தர்களுக்கு உன்னோடு ஐக்யத்தை அருள்புரிகிறாய். எல்லா உலகையும் தாங்குகிறாய், இங்கு (எல்லாவற்றிலும்) சாக்ஷியாக இருக்கிறாய். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே; உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: -    ஆச்சரியமாயும், பலவாய் உண்டாவதும் இருப்பதும் ஆன இவ்வுலகு          எல்லாம் ருத்ரனே, அந்த ஈச்வரனுக்கு நமஸ்காரம் இந்த வேத வாக்யமே, இந்த சுலோகத்தில் மூலமாய்க் கொள்ளலாம்.

 ஓமிதி தவ நிர்தே3ஷ்ட்ரீ மாயா -

       ஸ்மாகம் ம்ருடோ3பகர்த்ரீ போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             12

   'ஓம்' எனும் இந்த எழுத்தானது உன்னையே மாயையைத் தாண்டிய பரம்பொருளாய்க் குறிக்கிறது, ம்ருடனான உன்னைத் தெரிந்துகொள்ள எனக்கும் மிகவும் உதவியாயிருக்கிறது. ஏ! பரமேச்வரா, அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்கும் புகலாக இருக்கட்டும்.

ஒளதா3ஸ்யம் ஸ்புடயதி விஷயேஷ

       தி33ம்ப3ரதா ச தவைவ விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             13

    நீ திக்குகளை ஆடையாய்க் கொண்டிருப்பது உலக விஷயங்களில் உனக்குள்ள பற்றின்மையையே காட்டுகிறது. ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

அந்த: கரண விசுத்3தி4ம் ப4க்திம்

       ச த்வயி ஸதீம் ப்ரதே3ஹி விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             14

  உள்ளேயிருப்பதான மனதிற்குத் தூய்மையும், உன்னிடத்தில் நிலைத்திருக்கும் படியான பக்தியையும் கொடுக்கவேண்டுகிறேன். ஏ பரமேச்வரா? அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

அஸ்தோபாதி4 ஸமஸ்தவ்யஸ்தை

       ரூபைர்ஜக2 ந்மயோSஸி விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             15

                 தடையற்ற மொத்த முழுப் பொருளும் தனித்தனியானதுமான உன் உருவங்களால் சிவமயமான நீ எல்லா உலகமாயிருக்கிறாய்! ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

 கருணாவருணாலய மயி தா3

       உதா3ஸஸ் தவோசிதோ ந ஹி போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             16

  கருணைக்கடலே! உன் வேலைக்காரனான என்னிடத்தில் பாராமுகம் காட்டுவது உசிதமல்ல! எ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதா சிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

2ல ஸஹவாஸம் விக4டய க4டய ஸ

       தாமேவ ஸங்க3மநிசம் போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             17

    கெட்டவர்களோடு சேர்க்கையைத் தடுத்து நல்லவர்களுடன் எப்போதும் கூடும்படி செய்! ஏ பரமேச்வரா! அம்பாளுடன் கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

3ரளம் ஜக3து3பக்ருதயே கி3லிதம்

       4வதா ஸமோSஸ்தி கோSத்ர விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             18

     உலகிற்கு உதவி செய்வதற்காக (பாற்கடலில் அமுதம் கடையும் பொழு துண்டான) விஷத்தை உண்ட உனக்கு நிகர் உலகில் ஒருவருமில்லை. ஏ பரமேச் வரா! அம்பாளுடன் கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

4னஸார கௌ3கா3த்ர ப்ரசுர

       ஜடாஜூடபத்343ங்க3 விபோ

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             19

   கற்பூரம் போல் வெளுத்த உடலை உடையவரே! மிகப் பெரியதான ஜடை வைத்துள்ள ஏ பரமேச்வரா! அம்பாளுடன் கூடிய ஸாம்ப ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ஜ்ஞப்தி: ஸர்வ சரீரேஷ்வக2ண்டி3தா

       யா விபா4தி ஸா த்வம் போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             20

     எல்லா சரீரங்களிலும் பிரிவுபடாத அறிவாக விளங்குகிற சக்தியாகிய பரம்பொருள் நீயே. ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதா சிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: -    எவனால் இந்த எல்லாம் நிறைந்து காணப்படுகிறதோ, அவனே ஆத்மா,       என்று சுருதி சொல்லுகிறது. இந்த சுலோகத்திற்கு. இது பிரமாணமாய்         ஆகலாம்.

சபலம் மம ஹ்ருத3ய கபிம் விஷய

       த்3ருசரம் தருட4ம் ப3தா4ன விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             21

        என் மனதாகிற குரங்கு உலக விஷயங்களில் அலைகிறது. இதை நிலை நிறுத்த வேண்டுகிறேன். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதா சிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

சா2யா ஸ்தா2ணோரபி தவ தாபம்

       நமதாம் ஹரத்யஹோ சிவ போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             22

      விந்தை! ஸ்தாணு (பட்டுப் போன மரம்) என்று பெயர் பெற்ற போதிலும் உன் நிழல் பட்ட மாத்திரத்தில் வணங்குகிறவர்களின் தாபங்களை போக்கடிக்கிற ஏ சிவ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ஜய கைலாஸ நிவாஸ ப்ரமத2

       3ணாதீ4ச பூ4ஸுரார்சித போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             23

     கைலையங்கிரியில் வாழ்பவரும் ப்ரமதகணங்களின் தலைவரும் அந்தணர்களால் பூஜிக்கப்பட்டவருமான ஏ பரமேச்வரா! வெல்க! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

2ணுதக ஜ2ங்கிணு ஜ2ணுகத் கி டதக

       சப்3தை3ர் நடஸி மஹாநட போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             24

       ஜணு, தக, ஜங்கிணு. ஜணு, தத்கிட, தக என்ற ஒலியுடன் நடனம் புரியும் பெரிய நடனான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ஜ்ஞானம் விக்ஷேபாவ்ருதிரஹிதம்

       குரு மே கு3ருஸ்த்வமேவ விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             25

   நீயே (தக்ஷிணாமூர்த்தி), குரு உருவாயிருந்து இருப்பதை மறைப்பது. இல்லாததைத் தோற்று விட்டதுமான சக்தியின் செயல் நீங்கிய ஞானத்தை எனக்கு அருள்புரிவாய் ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: -    ஆவ்நதி - உள்ளதை மறைப்பது; விக்ஷேப சக்தி – இல்லாததை               இருப்பது போல் காட்டுவது; ஞானம் - பரம்பொருளை அறியும் அறிவு.

 டங்காரஸ்தவ த4னுஷோ த3யதி

       ஹ்ருத3யம் த்3விஷாமசநிரிவ போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             26

  உன் (பிநாகம் எனும்) வில்லின் நாண் ஓசை, கேட்ட மாத்திரத்திலேயே இடியோசை போல் பகைவர்கள் மனத்தை பிளக்கிறது. ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

டா2க்ருதிரிவ தவ மாயா ப3ஹி:

       அந்த: சூந்ய ரூபிணீ க2லு போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             27

  பூஜ்யத்தைப் போல உள்ளும், வெளியும் இல்லாத ஒன்றல்லவோ உன் வசமுள்ள மாயை. ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: -    மாயையை ப்ரக்ருதியாகவும் அதை தன் வசம் கொண்டவன் மாயீ            என்றும் சுருதி சொல்லுகிறது.

  3ம்பரமம்பு3 ருஹாமபி த3லயதி

       அநக4ம் த்வதங்க்4ரி யுக3லம் போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             28

   செந்தாமரையின் புகழையும் தோற்கடிப்பன உன் மாசற்ற திருவடிகள். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே, உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

4க்காக்ஷஸூத்ர சூல த்3ருஹிணக -

       ரோட ஸமுல்லஸத்கர போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             29

   உடுக்கை, ஜபமாலை, சூலம், பிரம்மகபாலம் இவைகளைக் கையில் கொண்ட ஏ பரமேச்வரா! அம்பளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ணாகார க3ர்பி4ணீ சேச்சு24தா3

       தே சரக3திர் ந்ருணாமிஹ போ

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             30

       '' என்ற எழுத்தின் வடிவைக் கொண்ட உன் அம்புப் பெட்டியில் உள்ள அம்பானது (எங்களை நோக்கி) வெளியில் வராத வரை மனிதர்களுக்கு நன்மையே செய்யும். ஏ பரமேச்வரா ! நீயே எனக்குச் சரணம். அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

தவ மந்வதி ஸஞ்ஜபத: ஸத்3ய:

       தரதி நரோ ஹி ப4வாப்3தி4ம் போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             31

  உன் திருமந்திரமான ஐந்தெழுத்தை மிகுதியாக ஜபம் செய்கிறவன் உடனேயே பிறவிக்கடலை கடக்கிறான். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே, சம்புவே, சங்கரனே, உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

 தூ2த்காரஸ்தஸ்ய முகே பூ4யாத்

       தே நாம நாஸ்தி யஸ்ய விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             32

   எவன் உன் நாமத்தை சொல்லவில்லையோ, னங்கள் அவனைத் ‘தூ’ என்று சொல்லட்டும். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப. சிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

3யேநீயஸ்ச த3யாலு: கோSஸ்தி மத்

       அந்யஸ் த்வத3னய இஹ வத3 போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             33

   இங்கு தயை வேண்டுபவனும் தயை உடையவனும் முறையே என்னையும் உன்னையும் தவிர வேறு யார்? சொல். ஏ. பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

4ர்மஸ்தா2பந்த3க்ஷ த்ர்யக்ஷ கு3ரோ

       3க்ஷயஜ்ஞ சிக்ஷக போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             34

  தருமத்தை நிலைநாட்டுவதில் வல்லவரும். முக்கண்ணரும், குருவின் உருவானவரும், தக்ஷனின் யாகத்தை அழித்தவருமான ஏ பரமேச்வரா! அம்பா ளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

நநு தாடி3தோSஸி 4னுஷா லுப்34தி4யா

       த்வம் புரா நரேண விபோ4

ஸாம்3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             35

  வேடனாய் வந்த உன்னை மனிதன் (அர்ஜுனன்) முன்பு பேராசை கொண்டு வில்லால் அடித்தான் அன்றோ! ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

 பரிமாதும் தவ ரூர்த்திம் நாலம்

       அஜஸ்தத்பராத்பரோSஸி விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             36

  (லிங்க) மூர்த்தியான உன்னை அளக்க பிரும்மாவாலும், விஷ்ணுவாலும் கூட முடியவில்லை. அப்பாலுக்கு அப்பாலான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

2லமி  ந்ருதயா ஜனுஷஸ்த்வத்பத3

       ஸேவா ஸநாதநேச விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             37

    உன் திருவடித் தொண்டில் ஈடுபட்ட மனிதனுக்கு அவன் மனிதனாக இருக்கிற காரணத்தால் தான் இங்கேயே எல்லாவற்றையும் கொடுத்து அருள் புரிகிறாய். ஏ ஆதி ஈசனான பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதா சிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

3லமாரோ3க்யம் சாயுஸ்த்வத்3கு3

       ருசிதாம் சிரம் ப்ரதே3ஹி விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             38

   பலம், நோயற்ற தன்மை, ஆயுள், உன் குணங்களில் இன்புறுதல், இவைகளை வெகுகாலம் எனக்கு நன்கு கொடுத்தருள்வாய். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்

43வன் ப4ர்க3 4யாபஹ பூ4தபதே

       பூ4திபூ4ஷிதாங்க3 விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             39

  பர்க்கன் (சூரியன்) எனப் பெயர் பெற்ற இறைவனே, அச்சத்தைப் போக் கடிப்பவனே, பூதங்களுக்குத் தலைவனே, உடல் முழுதும் விபூதியைப் பூசியவனே, ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

 மஹிமா தவ நஹி மாதி ச்ருதிஷ ஹி

       மாநீத4 ராத்மஜாத3வ போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             40

  பனிமலையின் புதல்வியான உமையின் கணவரே, வேதங்களில் கூட உன் மஹிமை முழுதும் அளக்கப்படவில்லை. ஏ பரமேசவரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

யம நியமாதி3பி4ரங்கை3ர்யமிநோ

       ஹ்ருத3யே ப4ஜந்தி ஸ த்வம் போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             41

 யமம், நியமம், ஆஸனம் ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம்,  ஸமாதி முதலிய (எட்டு) அங்கங்களால் யோகம் செய்து உன்னை மனதில் காணுபவரே யோகியர். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

 ரஜ்ஜாவஹிரிவ சுக்தெள ரஜதமிவ

       த்வயி ஜக3ந்தி பா3ந்தி விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             42

   கயிற்றில் பாம்பு தோன்றுவது போலும் கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவது போலும் பரமனாகிய உன்னிடத்தில் உலகம் (தோற்ற மாத்திரமே) பிரகாசிக்கிறது. ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: -    ஆதிசங்கரர் தான் ஸ்தாபித்த அத்வைத மதத்தை இங்கு                     உதாரணத்தோடு சுட்டிக்காட்டுகிறார். பிரம்மமே உண்மை, உலகம் பொய், என்னும் உண்மை இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

லப்3த்4வா ப4வத்ப்ரஸாதா3ச்சக்ரம்

       விது4ரவதி லோகமகி2லம் போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             43

       உன் அருளினால் சக்கரம் பெற்று விஷ்ணு உலகத்தைக் காக்கிறான். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

வஸுதா4தத்34ரதச்ச2 யரத2 மௌர் -

       வீசர பராக்ருதாஸுர போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             44

       பூமியைத் தேராகவும், வாசுகியை நாணாகவும், விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு முப்புர அரக்கர்களை தோல்வியுறச் செய்த ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: -    யஜுர்வேதம் ஆறாவது காண்டத்தில் சொல்லப்பட்டுள்ள திரிபுர               ஸம்ஹாரக் கதை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

சர்வ தே3வ ஸர்வோத்தம ஸர்வத3

       து3ர்வ்ருத்த க3ர்வ ஹரண விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             45

   சம்ஹராமூர்த்தியே! எல்லோரிலும் சிறந்த தெய்வமே, அனைத்தும் அளிப்போனே, நடத்தை கெட்டவர்களின் செருக்கை அடக்குபவருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! : சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

ஷட்3ரிபுஷ்டூ3ர்மிஷட்3விகார ஹர

       ஸந்முக2 ஷண்முக2 ஜநக விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             46

  ஆறு பகைவர்களையும், ஆறு மாறுதல்களையும் ஆறு அலைகளையும் போக் கடிப்பவரும், சத்தியத்தை முன்னிட்ட முருகனுக்கு தகப்பனாருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாய் இருக்கட்டும்.

குறிப்பு: -    காமம், க்ரோதம், லோபம், மோஷம், மதம், மாத்ஸர்யம் என்பவை            அறுபகைகள்; பிறத்தல், இருத்தல், வளர்த்தல், மாறுதல், தேர்தல்,             மறைதல் என்பவை ஆறு மாறுபாடுகள் - பசி, பிணி, முதுமை, சாவு,       இன்பம், துன்பம் இவை ஆறு அலைகள்.

ஸத்யம் ஜ்ஞானமநந்தம் ப்3ரஹ்மே (தி)

       ஏதல்லக்ஷண லக்ஷித போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             47

   உண்மை, அறிவு, முடிவற்றது பரம்பொருள் என்னும் (உபநிஷத) குறிப்பால் லக்ஷ்யமாகக் காட்டப்படும் பரம்பொருளே, ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: -    பொய்யான, அறிவற்ற, அழிகின்ற உலகத்தினின்று வேறுபட்டது              பரம்பொருள் என்பது இங்கே குறிப்பு.

ஹாஹாஹூஹூ முக ஸுர கா3யக

       கீ3தாபதா3நபத்3ய விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             48

  ஹாஹா, ஹுஹு என்ற கந்தர்வர்களின் தலைமையில் தேவப்பாடல்களோடு பாடப்பட்ட திருவடிகளையுடைய ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

 ளாதி3ர்ந ஹி ப்ரயோக3 ஸ்தத3ந்தம்

       இஹ மங்க3ளம் ஸதா3ஸ்து விபோ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             49

  '' என்ற எழுத்தை முதலாகக் கொண்ட சொற்பிரயோகம் இல்லை; அதை இறுதியில் கொண்ட மங்களம் கொண்டு உண்டாகட்டும். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

க்ஷணமிவ தி3வஸாந்நேஷ்யதி த்வத்பத3

       ஸேவாக்ஷணோத்ஸுக: சிவ போ4

ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர

       சரணம் மே தவ சரணயுக3ம்                                             50

      உன் திருவடி சேவை செய்வதில் ஆவல் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு க்ஷணம் மாதிரியே கழிந்துவிடுகிறது. அம்பாளோடு கூடிய வரும், ஸாம்ப, ஸதாசிவரும், சம்புவும், சங்கரருமான ஏ பரமேச்ரா! உன் இரு பாதமே என் புகலிடம்.

 

 

 

No comments:

Post a Comment