Saturday, November 7, 2020

 ப்ரஹ்ம-ஜ்ஞாநாவளீ மாலா

           [ப்ரஹ்ம ஞானாபவமுள்ளவர்கள் தமது அனுபவத்தை ஒருவாறு வெளியிட்டுக் காட்டும் சொற்களின் வரிசை அடங்கியது ‘ப்ரஹ்ம ஜ்ஞாநாவளீ” மாலை.]

 ஸக்ருத் ச்ரவண மாத்ரேண ப்ரஹ்மஜ்ஞாநம் யதோ ப4வேத் |

ப்ரஹ்ம-ஜ்ஞாநாவளீ மாலா ஸர்வேஷாம் மோக்ஷஸித்34யே II               1

       ஒரு தடவை சிரவணம் செய்தமாத்திரத்திலேயே எதனால் ப்ரஹ்ம ஞானம் ஏற்படுமோ (அந்த) " ப்ரஹ்மஞா நாவளீ மாலை'1 என்ற நூல் எல்லோருக்கும் மோக்ஷம் ஏற்படுவதற்கு (உபயோகமாக) ஆகிறது.

 அஸங்கோ3(அ)ஹ-மஸங்கோ3(அ)ஹ-மஸங்கோ3(அ)ஹம் புந: புந: |

ஸச்சிதா3நந்த3 ரூபோ(அ)ஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                         2

    நான் பற்று இல்லாதவன். நான் பற்று இல்லாதவன். எவ்விதத்திலும் நான் பற்றில்லாதவன். நான் ஸத்தியம், ஞானம், ஆனந்தம், இவற்றை ஸ்வரூப மாகக் கொண்டவன். நான் அழிவற்ற நான் தான். (சுத்த ஆத்மஸ்வரூபமே.)

 நித்யசுத்34 விமுக்தோ(அ)ஹம் நிராகாரோ(அ)ஹ-மவ்யய: |

பூ4மாநந்த3-ஸ்வரூபோ(அ)ஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                        3

    நான் நித்யனாயும், தோஷமற்றவனாயும், (அல்லது எப்பொழுதும் சுத்தனாயும்) விடுபட்டவனாயும் இருக்கிறேன். நான் உருவமற்றவன். குறைவுபடாதவன. நான் மிகப்பெரிய ஆனந்த ஸ்வரூபன். நான் அழிவற்ற நான் தான்.

 நித்யோ(அ)ஹம் நிரவத்3யோ(அ)ஹம் நிராகாரோ(அ)ஹ-மச்யுத: |

பரமாநந்த ரூபோ(அ)ஹ-மஹமேவாஹமவ்யய: ||                              4

       நான் நாசமில்லாதவன், நான் எல்லையில்லாதவன், நான் வடிவமற்றவன்நழுவாதவன் (ஸ்திரமானவன்). நான் மேலான ஆனந்தஸ்வரூபன். நான் நாசமற்ற நான் தான்.

 சுத்34சைதந்ய-ரூபோ(அ)ஹ-மாத்மாராமோ(அ)ஹ-மேவ ச |

அக2ண்டா3நந்த3-ரூபோ(அ)ஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                        5

  நான் சுத்தமான (ஒன்றிலும்) ஸம்பந்தப்படாத சைதன்ய ஸ்வரூபன். நான் ஆத்மஸ்வரூபம் ஒன்றிலேயே இன்பமடைகிறவன். நான் பிரிவற்ற (பூர்ணமான) ஆனந்த ஸ்வரூபன். நான் அழிவில்லாத நான் தான்.

 ப்ரத்யக்-சைதந்ய-ரூபோ(அ)ஹம் சாந்தோ(அ)ஹம் ப்ரக்ருதே: பர: |

சாச்வதாநந்த3 ரூபோஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                             6

       நான் உள்ளே விளங்கும் ஆத்ம சைதன்யஸ்வரூபி. நான் சாந்தன். பிரகிருதிக்கு (ஜகத்காரணமான மாயைக்கு) மேற்பட்டவன். நான் சாச்வதமான (உத்பத்தி விநாசமில்லாமல் எப்பொழுதும் இருக்கிற) ஆநந்த ஸ்வரூபன். நான் அழிவற்ற நான் தான்.

 தத்வாதீத: பராத்மா(அ)ஹம் மத்4யாதீத: பர: சிவ: |

மாயாதீத: பரம்ஜ்யோதி-ரஹமேவாஹ-மவ்யய: ||                               7

       நான் (ப்ரக்ருதி முதலான) தத்வங்களுக்கு மேற்பட்டவன். மேலான ஆத்மஸ்வரூபம். இடைநிலைக்கு மேம்பட்டவன். மேலான சிவ (மங்கள) ஸ்வரூபம். மாயையைக் கடந்தவன். மேலான ப்ரகாசஸ்வரூபன். நான் அழிவற்ற நான் தான்.

 நாநா-ரூப-வ்யதீதோ(அ)ஹம் சிதா3காரோ(அ)ஹ-மச்யுத: |

ஸுகரூப-ஸ்வரூபோ(அ)ஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                          8

    நான் பற்பல உருவங்களைக் கடந்தவன் (அல்லது நாம ரூபங்களற்றவன்), (ஆனாலும்) நான் சைதன்யத்தையே (ஞானத்தையே) வடிவமாகக் கொண்டவன். நழுவாதவன். நான் ஸுகரூபத்தையே ஸ்வரூபமாகக் கொண்டவன். நான் அழிவற்ற நான் தான்.

 மாயா-தத்கார்ய-தே3ஹாதி3 மம நாஸ்த்யேவ ஸர்வதா3 |

ஸ்வப்ரகாசைக ரூபோ(அ)ஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                        9

    எனக்கு எப்பொழுதும் மாயையும், அதன் கார்யமான தேஹம் முதலியவையும் கிடையவே கிடையாது. நான், தானே ப்ரகாசிக்கும் (சைதன்யம்) ஒன்றையே ஸ்வரூபமாகக் கொண்டவன். நான் அழிவற்ற நான் தான்.

 கு3ணத்ரய வ்யதீதோ(அ)ஹம் ப்3ரஹ்மாதீ3நாம் ச ஸாக்ஷ்யஹம் |

அநந்தாநந்த3 ரூபோ(அ)ஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                          10

   நான் (ஸத்வம். ரஜஸ், தமஸ்) என்னும் மூன்று குணங்களையும் தாண்டினவன் (நிர்க்குணன்.) நான் ப்ரஹ்மா முதலானவர்களுக்கும் ஸாக்ஷி. நான்

எல்லையற்ற ஆனந்த ஸ்வரூபி. நான் அழிவற்ற நான் தான்.

 அந்தர்யாமி-ஸ்வரூபோ(அ)ஹம் கூடஸ்த2: ஸர்வகோ3(அ)ஸ்ம்யஹம் |

பரமாத்மஸ்வரூபோஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                              11

     நான் அந்தர்யாமி - (உள்ளேயிருந்து நியமம் செய்யும் ஆத்ம) ஸ்வரூபன். நான் (சலனமும், மாறுதலும் அற்ற) கூடஸ்தனாயும், எங்குமுள்ளவனாயும் இருக்கிறேன். நான் பரமாத்மஸ்வரூபன். நான் அழிவற்ற நான் தான்.

 நிஷ்கலோ(அ)ஹம் நிஷ்க்ரியோ(அ)ஹம் ஸர்வாத்மா(ஆ)த்3ய ஸநாதந: |

அபரோக்ஷ ஸ்வரூபோஹ-மஹமமேவாஹ-மவ்யய: ||                         12

    நான் அவயவமில்லாதவன். நான் செய்கைகளற்றவன். எல்லா ஸ்வரூபமா யிருப்பவன். நான் பிரத்யக்ஷமாக அநுபவிக்கப்படும் ஸ்வரூபமாயிருப்பவன். நான் அழிவற்ற நான் தான்.

 த்3வந்த்3வாதி3-ஸாக்ஷி-ரூபோ(அ)ஹ-மசலோ(அ)ஹம் ஸநாதந: |

ஸர்வஸாக்ஷி-ஸ்வரூபோ(அ)ஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                     13

   நான் (ஸுகம், துக்கம் முதலான) த்வந்த்வங்களின் ஸாக்ஷிஸ்வரூபன். (அதாவது த்வந்த்வங்களால் பாதிக்கப்படாமல் விலகியிருந்து காணும் ஆத்மா.) நான் அசைவற்றவன். எப்பொழுதுமிருப்பவன். அனைத்துக்கும் ஸாக்ஷியாம் வடிவினன். நான் அழிவற்ற நான்தான்.

 ப்ரஜ்ஞாநக4ந ஏவாஹம் விஜ்ஞானக4ந ஏவ ச |

அகர்த்தா(அ)ஹ-மபோ4க்தா(அ)ஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                   14

   நான் அடர்ந்த பரஜ்ஞான ஸ்வரூபனே. அடர்ந்த விஜ்ஞான ஸ்வரூபந்தான். நான் செய்கிறவனல்ல. நான் அனுபவிக்கின்றவனல்ல. நான் அழிவற்றநானதான்.

 நிராதா4ர-ஸ்வரூபோ(அ)ஹம் ஸர்வதா4ரோ(அ)ஹமேவ ச |

ஆப்த-காம-ஸ்வரூபோ(அ)ஹ-மஹமேவாஹ-மவ்யய: ||                        15

  நான் ஆதாரமில்லாத ஸ்வரூபம். நான் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவனுமாவேன். நான் எல்லா விருப்பங்களையும் அடைந்த ஸ்வரூபம். நான் அழிவற்ற நான்தான்.

 தாபத்ரய-விநிர்முக்தோ தே3ஹ-த்ரய-விலக்ஷண: |

அவஸ்தா3த்ரய-ஸாக்ஷ்யஸ்மி சாஹமேவாஹ-மவ்யய: ||                      16

     நான் மூன்று தாபங்களிலிருந்து விடுபட்டவன். ஸ்தூலம், ஸூஷ்மம், காரணம் என்ற மூன்று தேஹங்களைக் காட்டிலும் வேறுபட்டவன். (விழிப்பு, கனவு, உறக்கம் என்ற) மூன்று அவஸ்தைகளுக்கும் ஸாக்ஷியாக இருக்கிறேன். (நான்) அழிவற்ற நான் தான்.

 த்3ருக்2-த்ருச்யௌ த்3வௌ பதா3ர்தெ2 ஸ்த்:பரஸ்பர விலக்ஷணௌ |

த்3ருக்3-ப்3ரஹ்ம த்3ருச்யம் மாயேதி ஸர்வ வேதா3ந்த டி3ண்டி3ம: ||             17

   ஒன்றுக்கொன்று வேறுபட்ட தன்மையுள்ள த்ருக் (பார்ப்பது), த்ருச்யம் (பார்க்கப்படுவது) என்ற இரண்டு பதார்த்தங்கள் உள்ளன. (இவற்றில்) பார்ப்பது ப்ரஹ்மம், பார்க்கப்படுவது மாயை என்பதே எல்லா வேதாந்தங்களின் முரசறைதலாகும். (பார்ப்பது என்பது அறிவையும், பார்க்கப்படுவது என்பது அறியப் படுவதையும் குறிக்கும்.)

 அஹம் ஸாக்ஷதி யோ வித்3யாத் விவிச்யைவம் புந: புந: |

ஸ ஏவ முக்த: ஸந் வித்3வாநிதி வேதா3ந்த டி3ண்டி3ம: ||                       18

   இவ்வாறு (ஆத்மாவை அநாத்மாவிலிருந்து) அடிக்கடி பிரித்து ''நான் ஸாக்ஷியே'', என்று எவன் அறிந்துகொள்கிறானோ, அந்த நல்ல ஞானிதான் முக்தன் என்பதே வேதாந்தங்களின் முரசறைதலாகும்.

 4ட-குட்3யாதி3கம் ஸர்வம் ம்ருத்திகா-மாத்ரமேவ ச |

தத்3வத்3-ப்3ரஹ்ம ஜக3த் ஸர்வமிதி வேதாந்த டி3ண்டி3ம: ||                     19

  குடம் சுவர், முதலியவை எல்லாம் மண்ணாக மட்டும் தான் உள்ளது. அதுபோல் பிரபஞ்சம் எல்லாம் ப்ரஹ்மம் என்பதே வேதாந்தங்களின் முரசறைதலாகும்.

 ப்3ரஹ்ம ஸத்யம் ஜக3ந்-மித்2யா ஜீவோ ப்3ரஹ்மைவ நாபர: |

அநேக வேத்3யம் ஸச்சா2 ஸ்த்ரமிதி வேதா3ந்த டி3ண்டி3ம: ||                   20

  ப்ரஹ்மமே ஸத்யமானது. பிரபஞ்சம் பொய்யானது*. ஜீவன் ப்ரஹ்மம்தான்; வேறு அல்ல. இந்த ரீதியாக அறியப்படுவதே சிறந்த சாஸ்திரம் என்பது வேதாந்தங்களின் முரசறைதலாகும்.

 

* 'மித்யை' என்பதைப் 'பொய்' எனும் போது அப்பட்டப் புளுகான அத்யந்த அஸத் என்று பொருள் கொள்ளக்கூடாது; யதார்த்த மாயையில் மெய் போலிருந்து ஞான நிலையில் பொய்யாக மறைந்துபோகிறது என்றே கொள்ள வேண்டும் என்பார் ஸ்ரீ காமகோடி ஸ்ரீசரணர்கள்.

 அந்தர்ஜ்யோதிர்-ப3ஹிர்ஜ்யோதி: ப்ரத்3யக்3ஜ்யோதி: பராத்பர: |

ஜ்யோதிர்-ஜ்யோதி: ஸ்வயம்-ஜ்யோதிராத்மஜோதி: சிவோஸ்ம்யஹம் ||       21

   நான் உள்ளே ப்ரகாசரூபன், வெளியிலும் ப்ரகாசரூபன், எல்லாவற்றிற்கும் மேலாக உள் நோக்கில் விளங்கும் ப்ரகாசரூபன். பிரகாசிக்கிற வஸ்துக்களுக்கும் பிரகாசம் கொடுக்கும் ஜ்யோதி. தானே பிரகாசிக்கும் ஜ்யோதி. ஜ்யோதிர் மயமான ஆத்மாவாக (சிவ மங்கள) ரூபனாக நான் இருக்கிறேன்.

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment