Saturday, November 7, 2020

 அர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம்

 (தேவியையும், இறைவனையும் மாற்றி மாற்றித் துதிப்பது.)

சாம்பேய கௌ3ரார்த4சரீரகாயை

       கர்பூர கௌ3ரார்த4சரீரகாய |

4ம்மில்லகாயைச ஜடாத4ராய

       நம: சிவாயை ச நம: சிவாய ||                                           1

       சம்பக மலர் போன்ற சுத்தமான பாதி உடலை உடையவனும், கர்ப்பூரம் போன்று வெளுத்த பாதி உடலை உடையவரும்; அழகான பின்னலையுடையவளும் சடைமுடியைக் கொண்டவருமான, 'சிவா' என்ற அம்பிகைக்கும், சிவபெருமானு க்கும் (இவ்விருவரும் ஒருங்கிணைந்த அர்த்த நாரீச்வர மூர்த்திக்கு) நமஸ்காரம்.

கஸ்தூரிகா குங்குமசர்ச்சிதாயை

       சிதாரஜ: புஞ்ஜவிசர்ச்சிதாய |

க்ருதஸ்மராயை விக்ருதஸ்மராய

       நம:  சிவாயை ச நம: சிவாய ||                                          2

       கஸ்தூரி குங்குமம் இவைகளால் அலங்கரிக்கப்பட்டவரும், சிதை பஸ்மத் தால் பூசப்பட்ட உடலையுடையவரும், மன்மதனை உயிர் பெறச் செய்தவளும், மன்மதனை எரித்தவருமான, சிவா என்ற அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.

4ணத்க்வணத் கங்கண நூபுராயை

       பாதா33ஜரரஜத்ப2ணி நூபுராய |

ஹேமாங்க3தா3யை பு4ஜகா3ரங்க3தா3

       நம: சிவாயை ச நம: சிவாய ||                                           3

       ஒலிக்கிற காப்பு கால் கொலுசுகளையுடையவளும், பாம்புகளாகிற கால் சலங்கையை உடையவரும், தங்கத்தினாலான தோள்வளைகளை உடையவளும் பாம்பையே தோள்வளைகளாகக் கொண்டவருமான,'சிவா'என்ற அம்பிகைக் கும் சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.

விசால நீலோத்பலலோசநாயை

       விகாஸிபங்கேருஹ லோசநாய |

ஸமேக்ஷணாயை விஷமேக்ஷணாய

       நம: சிவாயை ச நம: சிவாய ||                                           4

       விரிந்த கருங்குவளை மலர் போன்ற விழிகளை உடையவளும், மலர்ந்த தாமரை போன்ற கண்களை உடையவரும், இரட்டைக் கண்களை உடையவளும் முக்கண்ணருமான, 'சிவா' என்ற அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.

மந்தா3ரமாலாகலிதாலகாயை

       கபாலமாலாங்சித கந்த4ராய |

தி3வ்யாம்ப3ராயை ச தி33ம்ப3ராய

       நம: சிவாயை ச நம: சிவாய ||                                           5

  மந்தார மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முடியை உடையவளும், மண்டையோட்டு மாலைகளை கழுத்திலணிந்தவரும், நல்ல பட்டு வஸ்திரங்களை யணிந்தவளும், திசைகளையே ஆடையாய்க் கொண்ட வருமான, 'சிவா' என்ற அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.

அம்போ44ரச்யாமல குந்தளாயை

       தடித்பரபா4தர்ம்ர ஜடாத4ராய |

நிரீச்வராயை நிகி2லேச்வராய

       நம: சிவாயை ச நம: சிவாய ||                                           6

       மேகம் போல் கறுத்த முன் மயிர்களையுடையவளும், மின்னல் ஒளி போல் சிவந்த ஜடைமுடியுடையவரும், : தனக்கு - மேல் ஆளுவோர் இல்லாதவளும் உலகெல்லாம் ஆளும் ஈசனுமான,'சிவா'என்ற அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.

ப்ரபஞ்சஸ்ருஷ்ட்யுந்முக2 லாஸ்யகாயை

       ஸமஸ்தஸம்ஹாரக தாண்ட3வாய |

ஜகஜ்ஜனன்யை ஜக3தே3கபித்ரே

       நம: சிவாயை ச நம: சிவாய ||                                           7

       உலகைப் படைப்பிக்கும் நடனத்தை செய்பவளும், எல்லாவற்றையும் அழிக்கும் ஆனந்த தாண்டவரும். உலகுக்கு தாயும், உலகின் ஒரே தகப்பனுமான 'சிவாஎன்ற அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.

ப்ரதீ3ப்த ரேகோ2ஜ்ஜ்வல் குண்ட3லாயை

       ஸ்பு2ரன்மஹர்பன்னக3 பூ4ஷணாய |

சிவாந்விதர்யை ச சிவாந்விதா

       நம: சிவாயை ச நம: சிவாய ||                                           8

       ஒளி விடுகிற காது குண்டலங்களை உடையவளும், பெரிய பாம்புகளை காதுக்கு அணிகலனாய்க் கொண்டவரும், எப்பொழுதும் சிவனோடு சேர்ந்தவளும், சிவாவோடு சேர்ந்தவருமானத்'சிவா என்ற அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.

ஏதத்படே23ஷ்டக மிஷ்டத3ம் யோ

       4க்த்யா ஸமான்யோ பு4விதீர்க4ஜீவீ |

ப்ராப்நோதி ஸெளபா3க்3யமனந்தகாலம்

       பூ4யாத் ஸதா4 தஸ்ய ஸமஸ்த ஸித்3தி: ||                               9

       எவனொருவன் இந்த எட்டு சுலோகங்களை பக்தியுடன் படிக்கிறானோ அவன் உலகில் புழ் பெற்று நீண்ட ஆயுளுடன் வெகுகாலம தனக்கு வேண்டிய பாக்யங்களை அடைந்து, எப்போதும் எல்லாவித ஸித்திகளையும் நன்கு பெற்று விளங்குவான்.


 

 

No comments:

Post a Comment