Friday, November 6, 2020

 

கணேச புஜங்கம்

 ரணத் க்ஷத்3ர க4ண்டா நிநாதா3பி4ராமம்

சலத்தாண்ட3 வோத்33ண்ட பத்பத்3ம தாளம் |

லஸத் துந்தி3 லாங்கோ3 பரிவ்யாளஹாரம்

3ணாதீ4 சமீசான ஸூநும் தமீடே3 ||                              1

இனிமையாக சப்திக்கும் சிறிய மணிகளின் சப்தத்தால் மகிழ்ச்சியடைபவரும், தாண்டவமாடும் போது நிமிர்ந்ததும் அசைவதுமான திருவடித் தாமரையினால் தாளம் போடுபவரும், உதரத்தின் மீது பிரகாசிக்கும் ஸர்ப்ப ஹாரத்தையுடையவரும், பரமேச்வரனின் புதல்வருமான ஸ்ரீ கணேசரைத் துதிக்கிறேன்.

த்4வனி த்4வம்ஸ வீணா லயோல்லாஸிவக்த்ரம்

ஸ்புரச் சுண்ட33ண்டோ3ல்லஸத்3 பீ3ஜபூரம் |

கலத்33ர்ப்ப ஸௌக3ந்த்ய லோலாலி மாலம்

3ணாதீ4ச மீசான ஸூநும் தமீடே3 ||                              2

     வீணாகானம் முடிந்த பிறகு மனத்துள் அந்த ரஸத்தை அனுபவித்து லயித்திருப்பதால் பிரகாசிக்கும் முகத்தை உடையவரும், துதிக்கையில் விளங்கும் கொய்யாப்பழத்தை அல்லது மாதுளம்பழத்தை) யுடையவரும், பெருகும் மத ஜலத்தில் ஆசையினால் சுற்றும் வண்டுகளின் வரிசையையுடையவரும், பரமேச்வரனின் புதல்வருமான ஸ்ரீ கணேசரைத் துதிக்கிறேன்.

ப்ரகாசஜ் - ஜபாரக்த ரத்னப்ரஸூன

ப்ரவாள ப்ரபா4 தாருண ஜ்யோதிரேகம் |

ப்ரலம்போ33ரம் வக்ர துண்டை3 கத3ந்தம்

3ணாதீ4 ச மீசான ஸூநும் தமீடே3 ||                             3

 நன்கு பிரகாசிக்கும் செம்பருத்தி மலர், சிவந்த ரத்னம், சிவந்த புஷ்பம்,  பவழம், இளம் சூர்யன் இவைகளினது போன்ற காந்தியை யுடையவரும், பருத்த வயிற்றையுடையவரும், வளைந்த துதிக்கை, ஒற்றைத் தந்தம் இவற்றை யுடையவரும், பரமேச்வரனின் புதல்வருமான ஸ்ரீ கணேசரைத் துதிக்கிறேன்.

விசித்ரஸ்புரத்3 ரத்ன மாலாகிரீடம்

கிரீடோல்லஸச் – சந்த்3ர ரேகா2 விபூ4ஷம் |

விபூ4 ஷைகபூ4ஷம் – ப4வத்4வம்ஸ ஹேதும்

3ணாதீ4 சமீசான ஸூநும் தமீடே3 ||                              4

     பல நிறமுள்ளவைகளும் ப்ரகாசிப்பவைகளுமான ரத்னங்கள் பதித்த ஹாரம், கிரீடம் இவற்றையுடையவரும், கிரீடத்தின் மீது விளங்கும் சந்திரகலை யாகிய ஆபரணத்தையுடையவரும், ஆபரணங்களுக்கெல்லாம் முக்கியமான ஆபரணமாக விளங்குபவரும், ஸம்ஸார பந்தம் நீங்குவதற்குக் காரணமாக இருப்பவரும், பரமேச்வரனின் புத்ரருமான ஶ்ரீ கணேசரைத் துதிக்கிறேன்.

       உத3ஞ்சத்3 – பு4ஜாவல்லரீ த்3ருச்ய மூலோல்

              லஸத்3 ப்4ரூலதாவிப்4ரமப்4ராஜ த3க்ஷம் |

       மருத்ஸுந்த3ரீ சாமரை: ஸேவ்யமானம்

              3ணாதீ4ச மீசானஸூநும் தமீடே3 ||                               5

     உயிரே நிமிர்த்தப்பட்ட கொடி போன்ற அழகிய கைகளையும், ஓரங்களில் அழகாக விளங்கும் புருவங்களின் விலாஸங்களால் சோபிக்கும் கண்களையும் உடையவரும், தேவ ஸ்திரீகளால் வெண்சாமங்களைக் கொண்டு ஸேவிக்கப்படுப்வரும், பரமேச்வரனின் புதல்வருமான ஶ்ரீ கணேசரைத் துதிக்கிறேன்.

                ஸ்புரந்நிஷ்டு2ராலோல பிங்கா3க்ஷிதாரம்

              க்ருபா கோமளோதா3ர லீலாவதாரம் |

       கலா பி3ந்து32ம் கீ3யதே யோகி3வர்யை:

              3ணாதீ4ச மீசானஸூநும் தமீடே3 ||                               6

       ப்ரகாசிப்பதாயும் கம்பீரமாயும் சஞ்சலமாயும் சிவந்ததாயுமுள்ள கண் பார்வையை யுடையவரும், கருணையினால் அழகியதும் கபடமற்றதுமான லீலைகளோடு கூடிய அவதாரத்தையுடையவரும், சிறந்த யோகிகளால் கலா, பிந்து என்ற ஸ்தானங்களை அடைந்தவராகக் கூறப்படுபவரும், பரமேச்வரனின் புதல்வருமான ஶ்ரீ கணேசரைத் துதிக்கிறேன்.

               

யமேகாக்ஷரம் நிர்மலம் நிர்விகல்பம்

கு3ணாதீதம் ஆனந்த3ம் ஆகார சூன்யம் |

பரம் பாரம் ஓங்காரம் ஆம்னாய க2ர்ப4ம்

வத3ந்தி ப்ரக3ல்ப4ம் புராணம் தமீடே3 ||                           7

       எவரை மஹான்கள் ஒன்றான அழிவற்றதாயும், நிர்மலமான தாயும், பேத மற்றதாயும், குணங்களுக்கு அப்பாற்பட்டதாயும் (நிர்க்குண மாயும்), ஆனந்த ஸ்வரூபமாயும், உருவமற்றதாயும், எல்லாவற்றிற்கும் மேலானதாயும், ஓங்கார (ப்ரணவ) ஸ்வரூபமாயும், வேதங்களின் உட்பொருளாயும், சுலபமாக அறிய முடியாததாயும், அனாதியாயும் கூறுகின்றனரோ அத்தகைய கணேசரைத் துதிக்கிறேன்.

சிதா3னந்த ஸாந்த்3ராய சாந்தாய துப்4யம்

நமோ விச்வகர்த்ரே ச ஹர்த்ரே ச துப்4யம் |

நமோ (அ)னந்த லீலாய கைவல்ய பா4ஸே

நமோ விச்வபீ3ஜ ப்ரஸீதே2 சஸூனோ ||                          8

     பரிபூரண ஞான ஆனந்த ஸ்வரூபியும், சாந்தன்வாபியம், உலகைப் படைப்பவரும் அழிப்பவருமான தங்களுக்கு நமஸ்காரம். உலகிற்குக் காரணமாக விளங்கும் ஹே ஈச புதரா ! எல்லையற்ற லீலைகளைப் புரிகின்ற ஒளி வடிவமான கைவல்ய நிலையிலுள்ள தங்களுக்கு நமஸ்காரம். தாங்கள் அருள்புரிய வேண்டும்.

இமம் ஸுஸ்தவம் ப்ராதருத்தா2ய ப4க்த்யா

படே2த்3யஸ்து மர்த்யோ லபே4த்ஸர்வகாமான் |

3ணேசப்ரஸாதே3ன ஸித்4யந்தி வாசோ

2ணேசே விபெள3 துர்லப4ம் கிம் ப்ரஸன்னே ||                  9

     எந்த மனிதன் அழகிய இந்த ஸ்தோத்ரத்தைக் காலையில் எழுந்து பக்தியுடன் படிக்கிறானோ, அவன் எல்லா விருப்பங்களையும் அடைவான். ஸ்ரீ கணேசரின் அருளால் அவனது சொல் பயனளிக்கக் கூடியதாகும். ஸர்வ வ்யாபியான ஸ்ரீ மஹாகணபதி ஸந்தோஷமடைந்தால் எதைத்தான் அடைய முடியாது! (எல்லாவற்றையும் பெறலாம்.)

 


No comments:

Post a Comment