Friday, November 6, 2020

 

ஶ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்

     ஸதா3 பா3லரூபாபி விக்4 நாத்3ரிஹந்த்ரீ

மஹாத3ந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா |

விதீ4ந்த்3ராதி2 ம்ருக்3யா க3ணேசாபி4தா மே

வித4த்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்த்தி: ||                     1

     எப்பொழுதும் குழந்தை உருவமாயிருந்தாலும் விக்ன மலைகளை நாசம் செய்பவரும், யானை முகத்தோனாயினும் ஐம்முகத்தோனால் பூஜிக்கப்படுகிறவரும், நான்முகன், இந்திரன் முதலியவர்களால் தேடப்படுகிறவரும், கணேசன் என்னும் பெயருடையவருமான ஒரு கல்யாண உருவமானது செல்வத்தைக் கொடுக்கட்டும்.

ந ஜாநாமி பத்3யம் ந ஜாநாமி க3த்3யம்

ந ஜாநாமி சப்த3ம் ந ஜாநாமி சார்த்த2ம் |

சிதே3 கா ஷடா3ஸ்யா ஹ்ருதி2 த்3யோததே மே

முகா2ந்நிஸ்ஸரந்தே கி3ரஸ்சாபி சித்ரம் ||                        2

     சுலோகம், வசன நடை, சப்தம், அர்த்தம் ஒன்றும் எனக்குத் தெரியாது, எனினும், ஆறுமுகமுள்ள ஓர் அறிவானது என் ஹிருதயத்தில் ஒளிவிட்டு முகத்திலிருந்து விதவிதமான சொல்லாகவும் வெளிவருகிறது.

மயூராதி4ரூட4ம் மஹாவாக்ய கூ34ம்

மனோஹாரிதே3ஹம் மஹச்சித்தகே3 ஹம் |

மஹீதே3வதே2வம் மஹாவேத3 பா4வம்

மஹாதே3வபா2லம் ப4ஜே லோகபாலம் ||                         3

     மயில்வாகனனும், வேதங்களிலுள்ள மஹாவாக்யங்களில் மறைந்தவனும், மனத்திற்கு இன்பமளிக்கக்கூடிய சரீரத்தை உடையவனும், பெரியோர்களின் மனத்தை இருப்பிடமாய்க் கொண்டவனும், அந்தணர்கள் தெய்வமும், பெருமை வாய்ந்த வேதப்பொருளும், மஹாதேவன் குழந்தையுமாகி உலகத்தைக் காக்கிற முருகனை வணங்குகிறேன்.

யதா3 ஸந்நிதா4னம் க3தாமானவா மே

4வாம்போ4தி4 பாரம் க3தாஸ்தே ததை3|

இதி வ்யஞ்ஜயன் ஸிந்து4 தீரே ய ஆஸ்தே

தமீடே3 பவித்ரம் பராசக்தி புத்ரம் ||                               4

     [*பஞ்சாஸ்ய' என்பது 'சிங்கம்', 'ஐந்து முகத்தோன்' என இரு பொருள்படும். ஐம்முகச் சிவனால் வழிபடப்படும் கணேசரை, சிம்மமும் வழிபடும் யானை எனச் சிலேடையாக ஆசார்யாள் குறிப்பிடுகிறார்.]

'என் ஸன்னிதியை எப்பொழுது மனிதர்கள் அடைகிறார்களோ அப்பொழுதே பிறவிக் கடலைத் தாண்டிவிடுகிறார்கள்' என்று காண்பித்துக்கொண்டு * கடற் கரையில் கோயில் கொண்டுள்ள பராசக்தியின் புதல்வனான அந்தப் பவித்ரமான முருகனைத் துதிக்கின்றேன். [* திருச்செந்தூர் கடற்கரையில்]

யதா2ப்தே4 ஸ்தரங்கா3 லயம் யாந்தி துங்கா2:

ததை2 வாபத3ஸ்ஸன்னிதி4ம் ஸேவதாம் மே |

இதீவோர்மிபங்க்தீர் ந்ருணாம் த3ர்சயந்தம்

ஸதா2 பா4வயே ஹ்ருத்ஸரோஜே கு3ஹம் தம் ||                 5

     எப்படிக் கடல் அலைகள் மிக உயரமாக வந்தாலும் (கடலுள்) மறைந்து விடுகின்றனவோ, அவ்வாறே என் ஸன்னிதியில் ஸேவிக்கிறவர்களுக்கு ஆபத்துகளும் மறையும் என்று அலைகளின் வரிசையை மனிதர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் குகனை என் இருதயத் தாமரையில் எப்பொழுதும் வைத்துத் தொழுகிறேன்.

கி3ரௌ மந்நிவாஸே நரா யேSதி4 ரூடா4

ததா2 பர்வதே ராஜதே தேSதி4 ரூடா4: |

இதீவ ப்3ருவன் க3ந்த4 சைலாதி4 ரூட4

ஸ தே3வோ முதே3 மே ஸதா3 ஷண்முகோ2ஸ்து II              6

     'எந்த மனிதர்கள் நான் வசிக்கும் மலையில் ஏறினார்களோ, அப்பொழுதே அவர்கள் கயிலையங்கிரியை அடைந்தவர்களாய் ஆகிறார்கள்' என்று சொல்லுகிறவர் போல, கந்த மலையிலிருக்கும் அந்த தேவனான ஆறுமுகன் எப்பொழுதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கட்டும்.

மஹாம்போ4தி4 தீரே மஹாபாபசோரே

முநீந்த்3ராநுகூலே ஸுக3ந்தா4க்2யசைலே |

கு2ஹாயாம் வஸந்தம் ஸ்வபா4ஸா லஸந்தம்

ஜநார்த்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம் தம் ||                   7

 பெரிய பாபங்களைப் போக்கடிப்பதும், கடற்கரையில் உள்ளதும், முனிவர்களுக்கு உகந்ததுமான 'ஸுகந்தம்' என்னும் மலையின் குகையில் வசிப்பவனும், தன் ஸ்வயம்பிரகாசத்தால் ஜ்வலிப்பவனும், ஜனங்களின் துயரங்களைப் போக்குகிறவனுமான குகனை ஆச்ரயிக்கிறேன்.

லஸத்ஸ்வர்ணகே3ஹே ந்ருணாம் காமதோ3ஹே

ஸுமஸ்தோம ஸஞ்ச2ன்ன மாணிக்யமஞ்சே |

ஸமுத்3யத் ஸஹஸ்ரார்க்க துல்ய ப்ரகாசம்

ஸதா3 பா4வயே கார்த்திகேயம் ஸுரேசம் ||                       8

மனிதர்களின் இஷ்டங்களைக் கொடுக்கிற ஒளிவிடும் பொன்மயமான வீட்டில், பூக்களால் மறைக்கப்பட்ட மாணிக்கக் கட்டிலில் விளங்குபவரும், உதிக்கும் ஆயிரம் சூரியர்களுக்கு ஒப்பான ஒளியோடு கூடியவரும், கார்த்திகை நக்ஷத்திரங்களின் புதல்வரும், தேவர்களின் தலைவருமான முருகனை எப்பொழுதும் தொழுகிறேன்.

ரணத்34ம்ஸகே மஞ்ஜுளேத்யந்த சோணே

மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே |

மன: ஷட்பதோ3 மே ப4வக்லேசதப்த:

ஸதா3 மோத2 தாம் ஸ்கந்த3 தே பாத3பத்3மே ||                   9

 சப்திக்கின்ற அழகான பாத ஸரங்களையுடையதும், அழகானதும், மிகவும் சிவந்ததும், மனத்திற்கு இன்பத்தை அளிக்கும் அழகான அம்ரு தத்தால் நிறைந்த துமான உன் திருவடித் தாமரைகளில் ஸம்ஸாரத் துயரால் வேகும் என் மனமாகிற வண்டு எப்பொழுதும் களிக்கட்டும்.

ஸுவர்ணாப4 தி3வ்யாம்ப3ரைர்பா4ஸமாநாம்

க்வணத்கிங்கிணீமேக2லா சோப4மாநாம் |

லஸத்3 தே4 மபட்டேந வித்3யோதமாநாம்

கடிம் பா4வயே ஸ்கந்த3 தே தீப்2யமாநாம் ||                       10

 பொன் போல் ஒளிவிடுகிற உயர்ந்த பட்டாடையினால் விளங்குவதும், ஒலிக்கிற சலங்கைகளுடன் கூடிய ஒட்டியாணத்தால் அழகாயிருப்பதும், பொன்னா லான அரைஞாணுடன் மிகவும் ஒளிவிடுவதுமான உன் இடுப்புப் பிரதேசத்தை, ஹே ஸ்கந்தனே! எப்பொழுதும் சிந்தனை செய்கிறேன்.

புளிந்தே5ச கன்யா க4னாபோக3 துங்க3

ஸ்தநாலிங்க2 நாஸக்த காச்மீரராக3ம் |

நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:

ஸ்வப4க்தாவநே ஸர்வதா2 ஸாநுராக2ம் ||                        11

 வேடராஜன் குமாரியான வள்ளிதேவியின் உயர்ந்த தனபாரத்தை ஆலிங்கனம் செய்வதால் உண்டான செஞ்சந்தனக் குழம்பின் அடையாளத்தையுடையதும், தன் அடியார்களைக் காப்பதில் எப்பொழுதும் அன்புடனிருப்பதுமான*, தாரகனைக் கொன்ற முருகனான உன் மார்பை நான் வணங்குகிறேன்.

[* அநுராகம்'என்பது சிவப்பு, அன்பு. இரண்டையும் குறிக்கும் சிலேடையாக அமைந்துள்ளது.]

 

 

விதெள4க்லுப்த த3ண்டா2ன் ஸ்வலீலா த்4ருதாண்டா3ன்

நிரஸ்தேப4 சுண்டா2ன் த்3விஷத் காலதண்டா3ன் |

ஹதேந்த்2ராரிஷண்டா3ன் ஜக3த் த்ராண சௌண்டா3ன்

ஸதா3தே ப்ரசண்டா3ன் ச்ரயே பா3ஹுத3ண்டா3ன் ||               12

 நான்முகனைத் தண்டித்தவைகளும், தன் விளையாட்டால் ஆட்டிவைத்த அண்டங்களையுடையதும், யானைத் துதிக்கைகளைப் பழிப்பனவும், சத்ருக்களுக்கு யமதண்டம் போன்றவைகளும், இந்திரனின் சத்ருக்களைக் கொன்றவைகளும், உலகத்தைக் காப்பவைகளும், எப்பொழுதும் பலத்தோடு கூடியவைகளுமான உன் கைகளைச் சரணமடைகிறேன்.

ஸதா3 சாரதா3 ஷண்ம்ருகா3ங்கா3 யதி3 ஸ்யு :

ஸமுத்3யந்த ஏவ ஸ்தி2தாஸ்சேத் ஸமந்தாத் |

ஸதா3 பூர்ணபி3ம்பா3: களங்கைஸ்சஹீநா :

ததா3 த்வந் முகா2நாம் ப்ருவே ஸ்கந்த3 ஸாம்யம் ||              13

 

சரத்காலத்துப் பூர்ணிமையில் களங்கமில்லாமல் ஒரே சமயத்தில் எல்லாப் பக்கங்களிலும் ஆறு சந்திரர்கள் எப்பொழுதும் பூரண உருவில் உதயமாகும் பக்ஷத்தில் அப்பொழுது உன் முகத்திற்கு உவமை சொல்வேன். (உன் முகத்திற்கு உவமை கிடையாதென்றே பொருள்.)

ஸ்பு2ரன் மந்த3 ஹாஸை: ஸஹம்ஸாநிசஞ்சத்

கடாக்ஷாவளீ ப்4ருங்க3 ஸங்கோ4 ஜ்வலாநி |

ஸுதா4ஸ்யந்தி3 பி3ம்பா34ராணீசஸூனோ

தவாலோகயே ஷண்முகா2ம்போ4ருஹாணி ||                    14

 ஈச குமாரனே! புன்சிரிப்பாகிற அன்னங்களோடு விளங்குவனவும், சஞ்சரிக்கும் கடைக்கண் வரிசையான வண்டுகளோடு பிரகாசிப்பனவும், அம்ருதத்தைக் கொட்டுகிற உதடுகளோடு கூடியனவுமான தாமரை மலர்களாகிய உன் ஆறு முகங்களைக் காண்கிறேன்.

விசாலேஷு கர்ணாந்த தீ3ர்கே4ஷ்வஜஸ்ரம்

தயாஸ்யந்தி3ஷு த்3வாத3 சஸ்வீக்ஷணேஷு |

மயீஷத்கடாக்ஷ: ஸக்ருத்பாதிதஸ்சேத்

4வேத்தே த3யாசீல கா நாம ஹானி: ||                           15

 விசாலமானவையும், காதுகள் வரை நீண்டவைகளும், எப்பொழுதும் தயையைப் பெருகவிட்டுக்கொண்டிருப்பவைகளுமான உன் பன்னிரண்டு கண்களில், ஒரு தடவை கொஞ்சம் பார்வை என்னிடத்தில் விழுந்தால், ஹே, தயை நிறைந்தவனே ! உன் பெயருக்கு என்ன குறைவு வந்துவிடும்?

ஸுதாங்கோ3த்34வோமேஸி ஜீவேதி ஷட்3தா4

ஜபன்மந்த்ரமீசோ முதா3 ஜிக்4ரதேயான் |

ஜக3த்3பா4ரப்4ருத3ப்4யோ ஜகன்னாத2தேப்4ய:

கிரீடோஜ்வலேப்4யோ நமோ மஸ்தகேப்4ய: ||                     16

 குழந்தையே, என்னிடத்தில் உண்டானவனே, ஆயுளுடனிரு' என்னும் மந்திரத்தைப் பரமேசுவரரால் ஆறு தடவை ஜபம் செய்து மகிழ்ச்சியுடன் முகர்ந்து பார்க்கப்படுபவைகளும், உலகத்தின் சுமைகளைத் தாங்குபவைகளும், கிரீடங்களால் ஒளிர்பவைகளுமான, ஹே, ஜகந்நாதனே! உன் ஆறு தலைகளுக்கு வணக்கம்.

ஸ்புரத்3ரத்ன கேயூர ஹாராபி4ராம் :

சலத்குண்ட3ல ஸ்ரீலஸத்33ண்ட3பா43: |

கடௌ பீதவாஸா: கரே சாருசக்தி:

புரஸ்தாத்மமாஸ்தாம் புராரேஸ்தநூஜ: ||                         17

 ஒளியுடன் கூடிய ரத்தினத் தோள்வளைகள், மாலைகளால் எழிலுற்றவனும், ஆடுகிற குண்டலங்களின் ஒளியால் விளங்கும் கன்னப் பிரதேசமும், இடுப்பில் மஞ்சள் பட்டு வஸ்திரமும், கையில் அழகான வேலும் உடையவனுமான மெரித்த சிவனுடைய குமாரன் என் முன்னால் இருக்கட்டும்.

இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான்ப்ரஸார்ய

ஆஹ்வயத்யாத3ராச்சங்கரே மாதுரங்காத் |

ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்

ஹராச்லிஷ்டகா3த்ரம் ப4ஜே பா3லமூர்த்திம் ||                    18

 "இங்கு வா, குழந்தாய்!'' என்று சங்கரர் கையை நீட்டி ஆசையுடன் கூப்பிட்ட உடன் தாயின் மடியிலிருந்து எழுந்திருந்து தகப்பனாரையடைந்து அந்த ஹரரால் தழுவிக் கொள்ளப்பட்ட சரீரத்தை உருவினருமான முருகனை வணங்குகிறேன்.

குமாரேசஸூநோ கு3ஹ ஸ்கந்த3 ஸேநா-

பதே சக்திபாணே மயூராதி4ரூட4 |

புளிந்தா3த்மஜாகாந்த ப4க்தார்த்திஹாரின்

ப்ரபோ4தாரகாரே ஸதா3 ரக்ஷ மாம் த்வம் ||                      19

 குமரா, ஈச புத்திரா, குஹா, ஸ்கந்தா, ஸேநாபதியே, வேலை கையில் உடையோனே, மயில் வாகனனே, வேடராஜன் மகளான வள்ளி மணாளனே, அடியார்களின் துயரைப் போக்கடிப்பவனே, தாரகனைக் கொன்ற பிரபுவே, எப்பொழுதும் நீ என்னைக் காப்பாயாக.

     ப்ரசாந்தேந்த்2ரியே நஷ்டஸம்ஞே விசேஷ்டே

கபோ2த்கா3ரிவக்த்ரே ப4யோத்கம்பிகா3த்ரே |

ப்ரயாணோன்முகே2 மய்யநாதே2 ததா3நீம்

த்3ருதம் மே த3யாளோ ப4வாக்3ரே கு3ஹ த்வம் ||                 20

 புலன்கள் அடங்கி, நினைவிழந்து, செய்கையற்று, வாயில் சளி அடைக்க,  பயத்தினால் உடல் நடுங்க, இறப்பதற்கு முற்பட்ட சமயத்தில், துணையற்ற எனக்கு தயை நிறைந்தவனான குகனே, நீ விரைவோடு என் முன் நிற்க வேண்டும்.

க்ருதாந்தஸ்ய தூ3தேஷு சண்டே3ஷுகோபாத்

3ஹச்சி3ந்தி பி4ந்தீ4திமாம் தர்ஜயத்ஸு |

மயூரம் ஸமாருஹ்ய மா பை4ரிதி த்வம்

புர: சக்திபாணி: மமாயாஹி சீக்4ரம் ||                             21

 மிகவும் கடுமையான யமதூதர்கள் கோபத்துடன் “பொசுக்கு! வெட்டு! பிள!''  என்று என்னை மிரட்டும் சமயம், மயிலில் ஏறி “பயப்படாதே” என்று என்முன் சக்தி வேலும் கையுமாக வர வேண்டும்.

ப்ரணம்யாஸக்ருத் பாத3யோஸ்தே பதித்வா

ப்ரஸாத்3ய ப்ரபோ4 ப்ரார்த2யே (அ)நேகவாரம் |

ந வக்தும் க்ஷமோஹம் ததா3நீம் க்ருபாப்தே4

ந கார்யாந்தகாலே மநாக3ப்யுபேக்ஷா ||                           22

       உன் திருவடிகளில் விழுந்து பலமுறை வணங்கி, பிரபுவே, உன்னைப் பன்முறை (இப்பொழுதே). ப்ரார்த்திக்கிறேன். ஏ, கருணைக் கடலே ! (மரணம் நேரும்) அப்பொழுது நான் பேசும் சக்தியுடையவனாய் இருக்க மாட்டேன். (எனவே) இறக்கும் சமயத்தில் (நான் வேண்டாததால்) ஒருபொழுதும் என்னை நிராகரிக்கக் கூடாது என்று இப்பொழுதே வேண்டிக்கொள்கிறேன்.

ஸஹஸ்ராண்ட3 போ4க்தா த்வயா சூரநாமா

ஹதஸ்தாரக: ஸிம்ஹவக்த்ரச்ச தை3த்ய: !

மமாந்தர்ஹ்ருதி3 ஸ்த2ம் மந: க்லேசமேகம்

ந ஹம்ஸி ப்ரபோ4 கிம் கரோமி க்வ யாமி  ||                    23

பிரபுவே ! ஆயிரம் அண்டங்களை ஆண்டநுபவித்த சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் என்னும் அரக்கர்கள் உன்னால் கொல்லப்பட்டனர். என் இருதயத்தில் உள்ள ஒரே ஒரு மனத்துயரை நீ போக்காவிட்டால் என்ன செய்வேன்? எங்கு போவேன்?

 அஹம் ஸர்வதா3 து:க2 – பா4ராவஸன்னோ

4வாந் தீ3னப3ந்து3ஸ் த்வத3ன்யம் ந யாசே |

4வத்ப4க்திரோத4ம் ஸதா3 க்லுப்தபா34ம்

மமாதி4ம் த்3ருதம் நாசயோமாஸுத த்வம் ||                      24

 உமையாள் மகனே! நான் எப்பொழுதும் துக்கச் சுமையினால் தளர்ந்தவன். நீர் ஏழைகளுக்கிரங்குகிறவர். உம்மைத் தவிர வேறொருவரையும் நான் நாடவே மாட்டேன். உன்னிடத்து பக்தியைத் தடுப்பதும், ஓயாமல் உபத்திரவம் கொடுப்பதுமான என் மன நோயைப் போக்கடிப்பாயாக!

அபஸ்மார குஷ்ட2 க்ஷயார்ச: ப்ரமேஹ

ஜ்வரோன்மாத3 கு3ல்மாதி3 ரோகா3 மஹாந்த: |

பிசாசாச்ச ஸர்வே ப4வத்பத்ர்பூ4திம்

விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்3ரவந்தே ||                      25

 தாரகனைக் கொன்றவரே! அபஸ்மாரம் என்னும் காக்கை வலிப்பு, குஷ்டம், க்ஷயம், மூலநோய், நீரிழிவு, ஜுரம், பைத்தியம், குல்மம் முதலிய பெரிய நோய்கள், பிசாசுகள் எல்லாமும் இலையில் கொடுக்கப்படும் உன்னுடைய திருநீற்றைப் பார்த்த உடனேயே ஓடிவிடுகின்றன. (செந்திலாண்டவன் விபூதியைப் பன்னீர் இலையில் வைத்து வழங்குவது வழக்கம்.)

த்3ருசி ஸ்கந்த3 மூர்த்தி: ச்ருதெள ஸகந்த3 கீர்த்திர் -

முகே2 மே பவித்ரம் ஸதா3 தச்சரித்ரம் |

கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்4ருத்யம்

கு3ஹே ஸந்து லீநா மமாசேஷபா4வா: ||                          26

 கண்ணில் ஸ்கந்தன் உருவம், காதில் முருகன் புகழ், எப்போதும் என் வாக்கில் பரிசுத்தமான அவன் சரித்திரம், கையில் அவன் காரியங்கள், என்றும் உடல் அவன் சேவைக்கு, என்னுடைய ஸகல எண்ணங்களும் குகனிடத்தே லயமடைந்தவைகளாய் ஆகட்டும்.

முநீநாமுதாஹோ ந்ருணாம் ப4க்திபா4ஜாம்

அபீ4ஷ்டப்ரதா3 ஸ்ஸந்தி ஸர்வத்ர தே3வா: |

ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்2தா3நே

கு3ஹாத்தே3வமந்யம் ந ஜாநே ந ஜாநே ||                        27

 பக்தி செய்கின்ற மனிதர்களுக்கும், முனிவர்களுக்கும் இஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய தெய்வங்கள் எங்கும் இருக்கின்றன. ஈனப் பிறப்பெடுத்த மனிதர்களுக்கும், இஷ்டத்தைக் கொடுக்கக்கூடியவர் முருகக்கடவுளைத் தவிர வேறொருவரையும் நான் அறியேன், அறியேன்.

 களத்ரம் ஸுதா ப3ந்து4வர்3: பசுர்வா

நரோ வாத2 நாரீ க்3ருஹே யே மதீ3யா: |

யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ 4வந்தம்

ஸ்மரந்தஸ்ச தே ஸந்து ஸர்வே குமார ||                        28

 குமரக் கடவுளே! என்னைச் சேர்ந்த மனைவி மக்கள், பந்துக்கள், ஆண், பெண் எல்லோரும் உம்மைக் குறித்தே யாகம் செய்தல், வணங்குதல், துதித்தல், நினைத்தல் இவைகளைச் செய்கிறவர்களாய் இருக்கட்டும்.

ம்ருகா2: பக்ஷிணோ த3ம்சகா யே ச து3ஷ்டாஸ் -

ததா2 வ்யாத4யோ பா34கா யே மத3ங்கே3 |

4வச்சக்தி – தீக்ஷ்ணாக்3ரபி4ந்நா: ஸுதூ3ரே

விநச்யந்து தே சூர்ணிதக்ரௌஞ்சசைல ||                        29

       கிரௌஞ்சம் என்னும் மலையைப் பொடி செய்தவரே! மிருகங்கள், பக்ஷிகள், தீய கிருமிகள், அவ்வாறே என் உடலில் துன்புறுத்தும் நோய்கள் எல்லாம் உம்முடைய வேலின் கூரிய முனையால் பிளக்கப்பட்டவைகளாய் வெகுதூரம் சென்று நாசமடையட்டும்.

ஜநித்ரீ பிதா ச ஸ்வபுத்ராபராத4ம்

ஸஹேதே ந கிம் தே3வஸேநாதி4நாத2 |

அஹம் சாதிபா3லோ பவாந் லோகதாத:

க்ஷமஸ்வாபராத4ம் ஸமஸ்தம் மஹேச ||                        30

 தேவஸேனையின் கணவரே! தாயும் தந்தையும் தன் மகனின் குற்றங்களைப் பொறுக்கமாட்டார்களா என்ன? மஹேசா! நான் மிகச் சிறியவன். தாங்கள் உலகின் தந்தை. ஆகவே, என் குற்றம் அனைத்தையும் பொறுத்தருள்வீராக.

நம: கேகிநே சக்தயே சாபி துப்4யம்

நம: ச்சா23 துப்4யம் நம: குக்குடாய |

நம: ஸிந்த4வே ஸிந்து4தே3சாய துப்4யம்

புந: ஸ்கந்த3 மூர்த்தே நமஸ்தே நமோஸ்து ||                    31

       ஸ்கந்தமூர்த்தியே ! உம்முடைய மயிலுக்கும், வேலுக்கும், ஆட்டுக்கும், கோழிக் கொடிக்கும் வணக்கம்; கடலுக்கும் கடற்கரையிலிருக்கும் உமக்கும் வணக்கம். மறுபடியும் உமக்கு வணக்கம்; வணக்கம்.

 ஜயாநந்த3பூ4மந் ஜயாபாரதா4 மந்

ஜயாமோக4 கீர்த்தே ஜயாநந்த3 மூர்த்தே |

ஜயாநந்த3ஸிந்தோ4 ஜயாசேஷப3ந்தோ4

ஜய த்வம் ஸதா3 முக்திதாநேசஸூநோ ||                        32

 ஈச புத்திரனே; ஆனந்தத்தின் இருப்பிடமானவனே! வெல்க! மேலான ஸ்தானத்தில் உள்ளவனே! வெல்க! வீணாகாத புகழுடையவனே! வெல்க! ஆனந்த மூர்த்தியே! ஆனந்தக் கடலே! வெல்க! எல்லோருக்கும் உற்றவனே! வெல்க! மோக்ஷத்தைக் கொடுக்கிற நீ எந்நாளும் வெல்க!

பு4ஜங்கா3க்2ய வ்ருத்தேந க்லுப்தம் ஸ்தவம் ய :

படே2த் ப4க்தியுக்தம் கு3ஹம் ஸம்ப்ரணம்ய |

ஸுபுத்ராந் களத்ரம் த4நம் தீ3ர்4மாயு:

லபே4த் ஸ்கந்த3ஸாயுஜ்யமந்தே நர: ஸ : ||                       33

    புஜங்கம் என்னும் விருத்தத்தினால் செய்யப்பட்ட இந்தத் துதியை எவன் குஹனை நன்கு வணங்கி, பக்தியுடன் படிக்கிறானோ அவன் நல்ல பிள்ளைகள், மனைவி, செல்வம், நீண்ட ஆயுள் இவைகளுடன் முடிவில் ஸ்கந்தனின் ஸாயுஜ்யத்தை அடைவான்.

 

 

                

No comments:

Post a Comment